கெலவரப்பள்ளி பாசன கால்வாய் தூர்வாரப்பட்ட பணிகளை மாஜி ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி பாசன கால்வாய் தூர்வாரப்பட்ட பணிகளை மாஜி ஆய்வு

Added : ஜூலை 30, 2020
Share

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள, கெலவரப்பள்ளி அணையிலிருந்து, ஆண்டுதோறும் முதல் மற்றும் இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம், 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 10 கி.மீ., நீளமுள்ள அணையின் வலது புற கால்வாய் மற்றும் 11.6 கி.மீ., நீளம் கொண்ட இடது புற கால்வாய், புதர்மண்டி, மண் படிந்து சேதமடைந்த நிலையில் இருந்ததால், 2.75 கோடி ரூபாய் மதிப்பில், முதல்வரின் குடிமராமத்து திட்டத்தில், புனரமைப்பு பணி, கடந்த மே, 19ல் துவங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இம்மாதம், 12க்குள் அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், குடிமராமத்து பணிகள் நடந்ததால், தண்ணீர் திறக்கப்படவில்லை. இப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், வரும், 12ல் தண்ணீர் திறக்க அனுமதி கேட்டு, பொதுப்பணித்துறை சார்பில், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது. இந்நிலையில், குடிமராமத்து திட்டத்தில், பாசன கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பாசன விவசாயிகள் நாராயணசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X