பொது செய்தி

தமிழ்நாடு

அரசு தேர்வு செய்த இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட கிராம மக்கள் போராட்டம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஓசூர்: அஞ்செட்டி அருகே, அரசு தேர்வு செய்த இடத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்ட வேண்டும் என, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த நாட்றாம்பாளையம் மற்றும் தொட்டமஞ்சு உள்ளிட்ட, மலை கிராம பஞ்.,க்களை சுற்றி வசிக்கும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்?டோர், பிரசவம் மற்றும் அவசர மருத்துவ தேவைக்கு, 30 கி.மீ., தொலைவில் உள்ள அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத்தான் வந்து செல்ல வேண்டும். இதனால், மக்கள் நலன் கருதி, புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, அஞ்செட்டி வருவாய்த்துறை சார்பில், கேரட்டி அருகே, 1.50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு, சுகாதார நிலையம் அமைத்தால், நாட்றாம்பாளையம், தொட்டமஞ்சு மற்றும் சுற்று வட்டார கிராம மக்களுக்கு உதவியாக இருக்கும் மக்கள் தரப்பில் கூறுகின்றனர். இந்நிலையில், நாட்றாம்பாளையம் அடுத்த பஞ்சல்துணை அருகே, புதிய சுகாதார நிலையம் கட்ட, பட்டா நிலத்தை வழங்க, மக்கள் முன்வந்துள்ளனர். இதனால், சுகாதார நிலையம் அங்கு செல்ல இருப்பதாக, மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால், நீண்ட தூரம் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும் என, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தை பல்சல் துணையில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், கேரட்டியில் கட்ட வலியுறுத்தியும், 500க்கும் மேற்பட்டோர் திரண்டு, வருவாய்த்துறை தேர்வு செய்த கேரட்டியில் நேற்று போராட்டம் நடத்தினர். அஞ்செட்டி இன்ஸ்., தேவராஜ் மற்றும் போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தால், மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X