பொது செய்தி

தமிழ்நாடு

பர்கூரில் முன்னறிவிப்பின்றி கடைகள் மூடியதால் மக்கள் ஏமாற்றம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: பர்கூரில், முன்னறிவிப்பின்றி கடைகள் மூடப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, வரும், 31 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பர்கூரில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நேற்று(ஜூலை, 29) முதல், ஏழு நாட்களுக்கு பர்கூர் முழுவதும் எந்த தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்ற தகவல், 'வாட்ஸ் ஆப்'பில் வைரலானது. நேற்று, பர்கூர் நகர் முழுவதும், மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. காய்கறி கடைகள், தள்ளு வண்டிகள், சாலையோர கடைகள், டீ கடைகள் என, அனைத்து கடைகளும் நேற்று செயல்படவில்லை. எந்த அறிவிப்பும் இன்றி, இவ்வாறு திடீரென்று கடைகளை மூடச்செய்தது, பெரும் ஏமாற்றம் அளிப்பதாக, கடை உரிமையாளர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். இதுகுறித்து, பர்கூர் தாசில்தார் சித்ராவிடம் கேட்ட போது, ''பர்கூரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், ஜவுளி, டீ கடைகளை ஏழு நாட்கள் மூட வேண்டும் எனவும், மற்ற கடைகள் காலை, 6:00 முதல், 10:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது,'' என்றார். ஆனால், நேற்று எந்த கடையையும் திறக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X