பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஓசூர்: கெலமங்கலம், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய பாப்பிரிவுகள் உள்ளன. இதில், 2020 - 21ம் கல்வியாண்டின், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, இணையதளம் மூலம், அடுத்த மாதம், 4 வரை விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி மாணவ, மாணவியர் மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி உள்ளவர்கள், http://www.tngptc.in or https://www.tngptc.com என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மாற்று சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ், விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆகியவற்றை வைத்து கொள்ள வேண்டும். அடுத்த மாதம், 5 முதல், 16க்குள், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணமாக, 150 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவற்றில், ஏதாவது ஒரு வழியில் விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. கல்லூரியில், ஆண்டு கட்டணமாக, 2,157 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். மேலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப், பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X