பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் மோசடி நிறுவனத்துக்கு 'சீல்'

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

திருச்சி: ஊரடங்கு விதிகளை மீறியதாக, திருச்சி, 'எல்பின்' நிறுவனத்துக்கு, வருவாய்த் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். அதில் பணம் டிபாசிட் செய்தவர்கள், அதிர்ச்சியில் உள்ளனர்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு, 'எல்பின்' என்ற நிறுவனம் செயல்படுகிறது. இதன் அலுவலகம், மன்னார்புரத்தில் உள்ளது. இந்நிறுவனம் அதிக வட்டி தருவதாகவும், முதலீடுகளுக்கு இரட்டிப்பு பணம் தருவதாகவும், கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 'நிறுவனத்தில் டிபாசிட் செய்த பலருக்கு, பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை' என, எல்பின் நிறுவனம் மீது, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில், போலீசில் புகார் செய்யப்பட்டன. ஆனாலும், அந்நிறுவனம், தொடர்ந்து மக்களிடம் டிபாசிட் வசூலித்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறி, நேற்று காலை, எல்பின் நிறுவனத்தில், அதிகளவில் கூட்டம் சேர்க்கப்பட்டு மீட்டிங் நடந்துள்ளது. இது குறித்து, திருச்சி கலெக்டர் சிவராஜுக்கு புகார்கள் சென்றன. இதன்படி, தாசில்தார் மோகன், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். அங்கு, 300க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். ஊரடங்கு சட்டத்தை மீறியதாக, எல்பின் நிறுவனத்தை பூட்டி, 'சீல்' வைத்தனர். எல்பின் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது தெரிந்து, அதில் டிபாசிட் செய்தவர்கள், பணத்தை கேட்டு, நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜா, சமீபத்தில், பா.ஜ.,வில் சேர்ந்தது, அக்கட்சியில் சர்ச்சையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X