பொது செய்தி

தமிழ்நாடு

யாருடைய லாபத்துக்காக 8 வழிச்சாலை: அரசுக்கு தி.மு.க., - எம்.பி., கேள்வி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

தர்மபுரி: ''யாருடைய லாபத்துக்காக, எட்டு வழிச்சாலை அமைக்க, அ.தி.மு.க., அரசு ஆர்வம் காட்டி வருகிறது,'' என, தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் கேள்வி எழுப்பினார்.


தர்மபுரியில் அவரை, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் நேற்று சந்தித்து, எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, ஆதரவு தரவேண்டும் என, கோரிக்கை மனு கொடுத்தனர். அதை தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையிலிருந்து சேலத்துக்கு ஏற்கனவே, நான்கு வழிச்சாலைகள் மற்றும் ரயில், விமான போக்குவரத்தும் உள்ளது. தற்போதுள்ள சாலைகளை, ஆறு வழிச்சாலைகளாக மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், சாதாரண விவசாயிகள் பாதிக்கும் வகையில், எட்டு வழிச்சாலை அமைக்க, அ.தி.மு.க., அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இது யாருடைய லாபத்துக்காக என தெரிய வேண்டும். இத்திட்டத்துக்கு எதிராக, கிராம சபை கூட்டத்தில், எட்டு வழிச்சாலை அமையும் பகுதியை சேர்ந்தோர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதற்கு, அ.தி.மு.க., அரசு மதிப்பளிக்க வேண்டும். தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தை சேர்ந்த, தி.மு.க., - எம்.பி.,க்கள், இதுகுறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று, தேவையான நடவடிக்கை எடுப்பர். தமிழக அரசு, ஆறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட்டு, தற்போது சென்னை, சேலத்துக்கு உள்ள சாலைகளை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X