சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளித்தலை நகராட்சியில் ரூ.60 லட்சம் மோசடி: பெண் அலுவலர் தலைமறைவு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை நகராட்சியில், 60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, பெண் அலுவலர் மீது, கரூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில், 2019-20ம் ஆண்டின், வளர்ச்சி திட்டப்பணிகளில் நிதி செலவு செய்யப்பட்டது குறித்து, கடந்த பத்து நாட்களாக வருடாந்திர தணிக்கை ஆய்வு நடந்து வருகிறது.

விசாரணை: இதில், பல்வேறு கணக்குகளை ஆய்வு செய்ததில், மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சேலம் நகராட்சி மண்டல பொது மேலாளர் அசோக்குமார், கண்காணிப்பாளர் அப்துல் ஹாரிப் ஆகியோர் மேற்பார்வையில், தணிக்கையாளர்கள் குளித்தலை நகராட்சியில் அப்போது பணியில் இருந்த கமிஷனர் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

பி.எப்., நிதியில்...: இதில், நகராட்சியில் அக்கவுண்டன்டாக பணியாற்றும் சத்யா, 59 லட்சத்து, 73 ஆயிரத்து, 435 ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகராட்சி அலுவலர், பணியாளர்களின் சேமநல நிதி, பி.எப்., நிதி போன்றவற்றில் உள்ள பணத்தை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த பணத்தை பாலமுருகன், எல்.பாலாஜி, ஆர்.சுப்பிரமணி, எஸ்.சுப்பிரமணி ஆகிய பெயர்களில், செக் மூலம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. சத்யா, 56, மீது நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல பொது மேலாளர் அறிவுறுத்தல்படி, குளித்தலை நகராட்சி கமிஷனர் மோகன்குமார் அளித்த புகார்படி, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்போது, பெண் அலுவலர் சத்யா தலைமறைவாக உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X