பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு, வினாடிக்கு, 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து டெல்டா குறுவை சாகுபடிக்கு, இரு வாரமாக, காவிரியில் வினாடிக்கு, 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பாசன பகுதியில் பரவலாக மழை பெய்ததால், நேற்று காலை, 9:30 மணிக்கு, நீர் திறப்பு வினாடிக்கு, 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 64.69 அடி, நீர்இருப்பு, 28.30 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 6,563 கனஅடி நீர் வந்தது. நேற்று, கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர் திறப்பு, 5,000 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால், வரும் நாளில், அணை நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X