மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு

Added : ஜூலை 30, 2020
Share
மேட்டூர்: மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு, வினாடிக்கு, 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து டெல்டா குறுவை சாகுபடிக்கு, இரு வாரமாக, காவிரியில் வினாடிக்கு, 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பாசன பகுதியில் பரவலாக மழை பெய்ததால், நேற்று காலை, 9:30 மணிக்கு, நீர் திறப்பு வினாடிக்கு, 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 64.69 அடி,

மேட்டூர்: மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு, வினாடிக்கு, 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து டெல்டா குறுவை சாகுபடிக்கு, இரு வாரமாக, காவிரியில் வினாடிக்கு, 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பாசன பகுதியில் பரவலாக மழை பெய்ததால், நேற்று காலை, 9:30 மணிக்கு, நீர் திறப்பு வினாடிக்கு, 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 64.69 அடி, நீர்இருப்பு, 28.30 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 6,563 கனஅடி நீர் வந்தது. நேற்று, கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர் திறப்பு, 5,000 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால், வரும் நாளில், அணை நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X