பஸ்களை இயக்க தயாராக இருக்க கிளை மேலாளர்களுக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்களை இயக்க தயாராக இருக்க கிளை மேலாளர்களுக்கு உத்தரவு

Added : ஜூலை 30, 2020
Share

சேலம்: அரசு அனுமதித்தால், உடனே பஸ்களை இயக்க, டிரைவர், கண்டக்டர்களை தயாராக வைத்திருக்க, கிளை மேலாளர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.


கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கால், கடந்த மார்ச், 25 முதல் அரசு பஸ்களின் இயக்கம் முற்றிலும் தடைபட்டது. ஊரடங்கில் தளர்வால், ஜூன், 1ல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்து, மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டன. மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், மீண்டும், அதன் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 15 நாளுக்கு மேலாக, அரசு பஸ்கள், பணிமனைகளில் முடங்கியுள்ளன. இந்நிலையில், ஆக., 1 முதல், பஸ்களை இயக்கி கொள்ள அரசு அனுமதிக்கும் என்ற எதிர்பார்ப்பு, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இடையே எழுந்தது. இதனால், கிளை மேலாளர்களுக்கு, பஸ்களை இயக்க தயாராக இருக்கும்படி, மேலாண் இயக்குனர்கள், வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். நேற்று முன்தினம் முதல், பஸ்களில் உள்ள சிறு அளவிலான, பழுது நீக்கும் பணி, கிருமி நாசினி தெளிப்பு பணி நடந்து வருகிறது. நாளை காலை முதல், டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர், கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முககவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, பணிமனைகளில் தயாராக இருக்க, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X