சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளை மிரட்டிய புகார்: வனவரும் 'சஸ்பெண்ட்'

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஆத்தூர்: விவசாயிகளை மிரட்டிய புகாரில், வனச்சரகரை தொடர்ந்து, ஆத்தூர் வனவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், ஆத்தூர், ராமநாயக்கன்பாளையம், காராமணிதிட்டு, செங்குட்டை விவசாயிகள், மாவட்ட வன அலுவலர் முருகனிடம் புகார் அளித்தனர். அதில், 'வனவிலங்கு, விவசாய நிலத்தில் வராமல் இருக்க பள்ளம் தோண்ட அனுமதி கேட்டபோது, ஆத்தூர் வனச்சரகர் அன்பழகன் உள்ளிட்ட வனத்துறையினர், ஐந்து லட்சம் ரூபாய் கேட்டனர். அத்தொகையை தராமல் பள்ளம் தோண்டினால், துப்பாக்கியால் சுடுவதாக, வனத்துறையினர் மிரட்டினர்' என, கூறப்பட்டிருந்தது. இதனால், நேற்று முன்தினம், ஆத்தூர் வனச்சரகர் அன்பழகன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதை தொடர்ந்து, நேற்று, ஆத்தூர் வனவர் கோகுல், 28, என்பவரை, 'சஸ்பெண்ட்' செய்து, சேலம் மண்டல வனப்பாதுகாவலர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X