சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 ரவுடி சுற்றிவளைப்பு: தப்ப முயன்று படுகாயம் அடைந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சேலம்: சிவகங்கையில் வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய மூன்று ரவுடிகளை, சேலத்தில், தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர். அவர்கள் காயம் அடைந்ததால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, தாணிச்சாஊரணியை சேர்ந்தவர் ராஜபாண்டி, 26. இவரது தாய் சித்ரா, 55. இவர்கள், வீட்டின் போர்டிகோவில், கடந்த, 21ல் இருந்தபோது, பைக்கில் வந்த மூன்று பேர், நாட்டு வெடிகுண்டு இரண்டு வீசினர். ஒரு குண்டு, சித்ராவின் தலையில் பட்டு விழுந்து வெடித்தது. மற்றொரு குண்டு வெடிக்காத நிலையில், மர்ம நபர்கள் தலைமறைவாகினர். இதுகுறித்து, ராஜபாண்டி புகார்படி, ஆறாவயல் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, தனிப்படை அமைக்கப்பட்டு, மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், வெடிகுண்டு வீசிய கும்பலை சேர்ந்தவர்கள், தர்மபுரி மாவட்டம், தொப்பூர், செக்காரப்பட்டியில் தங்கியுள்ளதாக, தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விசாரித்ததில், மூவரும், சேலத்தில் முகாமிட்டிருந்தது தெரிந்தது. சேலம், சாமிநாதபுரம், குப்தா நகர், ஆதிபராசக்தி காலனியில், செல்வம் என்பவரின் வீட்டு இரண்டாவது மாடியில் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். நேற்று காலை, 5:30 மணிக்கு, அவரது வீட்டுக்குள் புகுந்தனர். போலீசை கண்டு அதிர்ச்சி அடைந்த மூன்று ரவுடிகளும், பின்புற கதவை திறந்து வெளியே குதித்தனர். அதில், படுகாயம் அடைந்தவர்களை, தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேவகோட்டை சங்கர் மகன் மதிபாலா, 23, சிவகங்கை முருகேசன் மகன் விஜயகுமார், 24, ஆறாவயல் செல்வராஜ் மகன் முத்துராம், 27, என தெரிந்தது. விஜயகுமார், ராஜபாண்டி இடையே ஏற்பட்ட முன்விரோதத்தால், அவரை கொல்ல, விஜயகுமார் கூட்டாளிகள் சேர்ந்து, நாட்டு வெடிகுண்டு வீசியது தெரிந்தது. மூவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து, குப்தா நகரில் மேற்கு சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் நாகராஜன், பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X