ஜெ., நினைவிடம் கட்ட கூடுதலாக ரூ.7 கோடி ஒதுக்கீடு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளுக்கு, கூடுதலாக, 7 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை, மெரினாவில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடம் என, பெயர் மாற்றம் செய்துள்ளது. இங்கு, 50.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஜெ.,க்கு தனி நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
Jayalalitha, jaya Memorial, jaya memorial Construction, ஜெயலலிதா, நினைவிடம், கட்டுமானம், 7கோடி, ஒதுக்கீடு

சென்னை: ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளுக்கு, கூடுதலாக, 7 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை, மெரினாவில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடம் என, பெயர் மாற்றம் செய்துள்ளது. இங்கு, 50.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஜெ.,க்கு தனி நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது, பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கட்டுமான பணிகளுக்கு, 7 கோடி ரூபாயை கூடுதலாக வழங்குமாறு, பொதுப்பணித் துறை வாயிலாக, முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் வலியுறுத்தப்பட்டது.


latest tamil newsஇதை ஏற்று, தற்போது, கட்டுமான பணிகளுக்கு, 7 கோடி ரூபாயை கூடுதலாக ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. நினைவிடத்தில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், புகைப்படம் மற்றும் வீடியோ கண்காட்சி அரங்கம், ஒலி, ஒளி வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கு, கூடுதலாக, 10 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. இது, நிதித் துறையின் பரிசீலனையில் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
03-ஆக-202010:02:57 IST Report Abuse
S.Ganesan வெட்டி வீண் தண்ட செலவு செய்வதை நிறுத்துங்கள்
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
02-ஆக-202011:23:59 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI நூறு கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு மக்கிளின் வரி பணத்தில் கோடி கோடி செலவு செய்து நினைவிடம் .நல்லாயிருக்கே .
Rate this:
Cancel
30-ஜூலை-202017:11:37 IST Report Abuse
ரவிச்சந்திரன் முத்துவேல் ஜெ., நினைவிடம் கட்ட அவருடைய 4 கிலோ, 372 கிராம் எடையுள்ள தங்கம் இன்றைய மதிப்பில் சுமார் ரூபாய் 22030508 மற்றும் 601 கிலோ, 424 கிராம் எடையுள்ள வெள்ளி இன்றைய மதிப்பில் சுமார் ரூபாய் 37889712 ஆகா மொத்தம் இன்றைய மதிப்பில் சுமார் ரூபாய் 59920220. இதனைக்கொண்டே செய்யலாமே? ஏன் அரசுப்பணத்தை வீணடிக்கவேண்டும்? மக்கள் கேள்வி கேட்டமாட்டார்கள் என்பதால் தானே?
Rate this:
சிவகிரி - மணிகிராமம்,இந்தியா
30-ஜூலை-202023:08:39 IST Report Abuse
சிவகிரி//ஜெ., நினைவிடம் கட்ட அவருடைய 4 கிலோ, 372 கிராம் எடையுள்ள தங்கம் இன்றைய மதிப்பில் சுமார் ரூபாய் 22030508 மற்றும் 601 கிலோ, 424 கிராம் எடையுள்ள வெள்ளி இன்றைய மதிப்பில் சுமார் ரூபாய் 37889712 ஆகா மொத்தம் இன்றைய மதிப்பில் சுமார் ரூபாய் 59920220. இதனைக்கொண்டே செய்யலாமே?// இதுவுமே மக்கள் பணம்தானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X