கோவையில் ஒரே நாளில் 189 பேர் டிஸ்சார்ஜ்: குணமடைவோர் அதிகரிப்பு| Dinamalar

தமிழ்நாடு

கோவையில் ஒரே நாளில் 189 பேர் 'டிஸ்சார்ஜ்': குணமடைவோர் அதிகரிப்பு

Added : ஜூலை 30, 2020
Share


கோவை:

கோவையில் நேற்று ஒரே நாளில், 18௯ பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர். 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,344 ஆக உயர்ந்துள்ளது.கோவை, வன்னியம்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பி.ஆர்.எஸ்.,காவலர் குடியிருப்பை சேர்ந்த இருவர், மேட்டுப்பாளையம் போலீஸ் ஒருவர், அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 289 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,344 ஆக உயர்ந்தது.உக்கடத்தை சேர்ந்த 57 வயது பெண், கவுண்டம்பாளையம் பாரதி நகரை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது.கோவை இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனை கொரோனா சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த, 189 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 2,591 ஆக உயர்ந்துள்ளது. 1,687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X