பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கோவை:கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கூறியுள்ளதாவது:2020-21ம் கல்வியாண்டில், முதலாமாண்டு பட்டய சேர்க்கைக்கான பாடப்பிரிவுகளுக்கு, மாணவர்கள், https://www.tngptc.in or https://www.tngptc.com என்ற இணையதள முகவரி வழியாக விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி தேவை.இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், சமூகஇடைவெளியை பின்பற்றி ேநரில் சென்று, TPAFC சேவை மையம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.சிவில், மெக்கானிக்கல், இ.இ.இ., இ.சி.இ., கம்ப்யூட்டர் இன்ஜி., புரொடக்சன் இன்ஜி., ஆகிய பட்டய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க, பதிவு கட்டணமாக பொது பிரிவினருக்கு, 150 ரூபாய் கட்டணம்.நெட் பேங்கிங், ஏ.டி.எம்., டெபிட், கிரெடிட் கார்டு வாயிலாக செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க, ஆக., 4ம் தேதி கடைசி நாள். ஆக., 5ம் தேதி முதல் சான்றிதழ்களை பதிவேற்றலாம். சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஆக., 16ம் தேதியாகும். நேரடி இரண்டாமாண்டு மற்றும் பகுதி நேர பட்டய பாடப்பிரிவு சேர்க்கைக்கான அறிவிப்புகள், பின்னர் வெளியிடப்படும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X