கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கல்வி நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ., சட்டம் பொருந்தும்: மூன்று பெண் நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement



சென்னை:'தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, இ.எஸ்.ஐ., எனப்படும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் தவிர்த்து, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, தொழிலாளர் காப்பீட்டு சட்டத்தை அமல்படுத்துவதாக, 2010 நவம்பரில், தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, இ.எஸ்.ஐ., கழகத்தில் பதிவு செய்யும்படி, கல்வி நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பழனியப்பன், சுயநிதி கல்லுாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு உத்தரவுக்கு தடை விதித்தது. தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், சில கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், நிலுவையில் உள்ள வழக்கில் தீர்வு காணும் வரை, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கும் என, உத்தரவிட்டது.அதேநேரத்தில், அரசு உத்தரவை எதிர்த்து, ஒரு கல்வி நிறுவனம் தொடர்ந்த வழக்கை, மற்றொரு, 'டிவிஷன் பெஞ்ச்' தள்ளுபடி செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வெவ்வேறு டிவிஷன் பெஞ்ச், வெவ்வேறு உத்தரவுகளை பிறப்பித்ததால், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, மூன்றுநீதிபதிகள் அமர்வை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நியமித்தார்.இதையடுத்து, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, இ.எஸ்.ஐ., சட்டம் பொருந்துமா என்ற கேள்விக்கு, தீர்வு காண இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.கல்வி நிறுவனங்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் விஜயன், சேவியர் அருள்ராஜ், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட வழக்கறிஞர்களும், தமிழக அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், இ.எஸ்.ஐ., சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவீந்திரன் ஆகியோரும் ஆஜராகி வாதாடினர்.வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கல்வி நிறுவனங்களுக்கு, இ.எஸ்.ஐ., சட்டம் பொருந்தும்; இதுகுறித்து, தொழிலாளர் நலத்துறை பிறப்பித்த உத்தரவு செல்லும் என, உத்தரவிட்டது.உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பழனியப்பன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X