பொது செய்தி

தமிழ்நாடு

அணையில் தண்ணீர் குறைவு மின் உற்பத்திக்கு சிக்கல்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 அணையில் தண்ணீர் குறைவு மின் உற்பத்திக்கு சிக்கல்

ஊட்டி:

ஊட்டி போர்த்திமந்து அணையில் குறைந்து வரும் தண்ணீரால், மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குந்தா, பைக்காரா என, இரண்டு மின் திட்டங்களில், 12 மின்நிலையம்,13 அணைகள் உள்ளன. தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.பெரும்பாலான அணை களில், 40 சதவீதம் அளவு மட்டுமே தண்ணீர் இருப்பில் உள்ளது. பைக்காரா நீர்மின்திட்டத்தில் உள்ள, போர்த்திமந்து அணையில், 130 அடியில், 60 அடிக்கு தண்ணீர் மட்டும் உள்ளதால், மின்உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'தற்போது, 12 மின்நிலையங்களில் நாளொன்றுக்கு அதிகபட்சம், 350 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழையை எதிர்பார்த்துள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X