பொது செய்தி

தமிழ்நாடு

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி முகாம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கோவை;
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு, உடற்பயிற்சி மீதான புரிதலுடன் கூடிய ஆர்வத்தை ஏற்படுத்த, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி முகாம் வரும், ஆக., 3ல் துவங்கவுள்ளது.இதற்காக தமிழகம் முழுவதிலும், 6 ஆயிரத்து 520 உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 13 கட்டங்களாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் வரும், ஆக., 3ல் துவங்கி, அக்.,31ல் நிறைவு பெறுகிறது. மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை நடக்கவுள்ளது.கோவை மாவட்டத்திலிருந்து 300 பேர், ஈரோடு மாவட்டத்திலிருந்து 216 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் பங்கேற்க உள்ளனர்.இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷாவிடம் கேட்ட போது, ''உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வகுப்பு குறித்து, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 300 உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வகுப்பில், விளையாட்டின் அடிப்படை, புதிய விளையாட்டுகளின் விதிமுறை, உடல் திறன் மேம்பாடு போன்ற பயனுற்ற தகவல்கள் கற்றுத்தரப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X