பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா அளவில் மருத்துவ கட்டமைப்பு: விரைவில் வலுப்படுத்த எம்.பி., வலியுறுத்தல்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement


கோவை:

கொரோனா பரவலை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தாலுக்கா அளவில் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான, மருத்துவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என, வலியுறுத்தி, எம்.பி., நடராஜன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதுகுறித்து, மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த பத்து நாட்களில், கோவையில் 2000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் தீவிரத்தை உணர முடிகிறது. வசதியுள்ள சிலரே, தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அதிக கட்டணம் காரணமாக, பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைகளையே நாடும் நிலையுள்ளது. இந்நிலையில், இ.எஸ்.ஐ., கொடிசியாவில் மட்டுமே, கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறிகுறியுள்ள பலர், பரிசோதனை மேற்கொள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனை வரவேண்டிய சூழல் உள்ளதால், தினந்தோறும் அதிக கூட்டம் காணப்படுகிறது.இதன் மூலம் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மருத்துவமனையை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், கிருமிநாசினி தெளிப்பதில் மெத்தனம் காண்பிக்கப்படுகிறது.இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கொடிசியாவில் டாக்டர்கள், நர்ஸ் தேவைக்கேற்ப இல்லாததால், பணியில் உள்ளவர்களுக்கு, ஓய்வில்லாத நிலை ஏற்படுகிறது இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். தாலுகா அளவில் பரிசோதனை, மருத்துவ கட்டமைப்பு வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X