பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி அதிகரிப்பு 

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கோவை:

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், நோயாளிகளின் வசதிக்காக கூடுதலாக, 70 படுக்கைகளுக்கு, ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, டீன் நிர்மலா தெரிவித்தார்.கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதேவேளையில், பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கையும், அதிகரித்து வருகிறது.இந்நிலையில், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில், பலருக்கும் நுரையீரல் பாதிப்பு இருக்கிறது. அதேசமயம் மருத்துவமனையில் உள்ள, 240 படுக்கைக்கு மட்டும் ஆக்ஸிஜன் வசதி இருந்த நிலையில், கூடுதலாக, 70 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, நுரையீரல் பிரச்னை உள்ளது. இதனால், ஆக்ஸிஜன் தேவை இருப்பதால், அனைத்து படுக்கைகளுக்கும், ஆக்ஸிஜன் வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 70 படுக்கைகளுக்கு இவ்வசதி செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X