பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பணி ஒத்தாசைக்கு பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கோவை:

கோவை மாநகராட்சியில், 'கொரோனா' பரவல் தடுப்பு பணிக்காக, பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.மாநகராட்சி பகுதியில், 100 வார்டுகள் உள்ளன. ஆனால், 23 சுகாதார ஆய்வாளர்களே இருக்கின்றனர். ஒருவர், மூன்று முதல் நான்கு வார்டுகளை கவனிக்கின்றனர். தினமும், 4 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். அப்பகுதிக்குச் சென்று, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்குள், ஒரு வழியாகி விடுகின்றனர்.அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்க, பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, மாநகராட்சி பகுதிக்கு தேவையான எண்ணிக்கையில், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யும் பணி, துரிதகதியில் நடந்து வருகிறது. இவர்கள், சுகாதார ஆய்வாளர்களுடன் இணைந்து பணிபுரிய, களமிறக்கப்படவுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X