பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி கமிஷனரின் டிரைவருக்கு 'கொரோனா' 

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கோவை:

கோவை மாநகராட்சி கமிஷனரின் டிரைவர் மற்றும் துணை கமிஷனரின் உதவியாளருக்கு, 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.'கொரோனா' தொற்று பரவாமல் தடுக்கும் பணியில், கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், கடந்த மார்ச் முதல், களப்பணியாற்றி வருகின்றனர்.இதுவரை, 5 செவிலியர்கள், ஒரு உதவி பொறியாளர், ஒரு சுகாதார ஆய்வாளர், நகர் நல அலுவலர் ஜீப் டிரைவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையில் இருக்கின்றனர்.தற்போது, மாநகராட்சி கமிஷனரின் ஜீப் டிரைவர் மற்றும் துணை கமிஷனரின் உதவியாளருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அதனால், மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும், அனைவருக்கும் சளி, ரத்த மாதிரி சேகரித்து, பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X