தனியார் மருத்துவமனை மீது மருத்துவ கழிவு புகார்| Dinamalar

தனியார் மருத்துவமனை மீது மருத்துவ கழிவு புகார்

Added : ஜூலை 30, 2020
Share

போத்தனூர்:
மருத்துவ கழிவுகளை எரிக்க முயன்றதாக, தனியார் மருத்துவமனை மீது, வருவாய் ஆய்வாளர் போலீசில் புகார் கொடுத்தார்.சுந்தராபுரத்தில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு பணிபுரிவோர் நேற்று முன்தினம் மாலை, எல்.ஐ.சி., காலனி எதிரேயுள்ள காலியிடத்தில், மருத்துவ கழிவுகளை மூட்டை, மூட்டையாக கொட்டி, தீ வைக்க முயன்றனர்.அங்கிருந்த டிரைவர்கள் கேட்ட போது 'உணவு கழிவு' என கூறியுள்ளனர். பிரித்து காண்பிக்க கூறியபோது தயங்கினர். மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மூட்டைகளை மீண்டும் வாகனத்தில் ஏற்றி, அங்கிருந்து சென்றுவிட்டனர்.இதனையறிந்த குறிச்சி கிராம வருவாய் ஆய்வாளர் அஜீபா, நேற்று போத்தனூர் போலீசில், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க, புகார் மனு கொடுத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X