தமிழ்நாடு

கொரோனா ஒழியும்; வர்த்தகம் பெருகும்! நம்பிக்கையுடன்திருப்பூர் பின்னலாடை துறையினர் காத்திருப்பு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
கொரோனா ஒழியும்; வர்த்தகம் பெருகும்! நம்பிக்கையுடன்திருப்பூர் பின்னலாடை துறையினர் காத்திருப்பு

திருப்பூர்;கொரோனா ஒழிக்கப்பட்டு, விரைவில் ஆடை வர்த்தகம் பெருகும் என்கிற நம்பிக்கையுடன், வசந்தத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர், திருப்பூர் பின்னலாடை துறையினர்.
கொரோனா வைரசால், திருப்பூரின் உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை வர்த்தகம் கடந்த மூன்று மாதங்களாக பெரும் சரிவை சந்தித்துள்ளது. மத்திய அரசு அறிவித்த, அவசர கால கடன், ஏற்கனவே பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்த ஆறு மாதம் அவகாசம் ஆகியன தொழில் துறையினருக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.அமெரிக்கா, ஐரோப்பா உட்பட வெளிநாடுகளில் ஆடை வர்த்தகம் அதிகரிக்க துவங்கியுள்ளது.
ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள், அந்நாடுகளிலிருந்து, வரத்துவங்கியுள்ளன. சேம்பிள் தயாரித்து கொடுத்து, ஆர்டர்களை வசப்படுத்துவதற்கான முயற்சியில் ஏற்றுமதி நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. உள்நாட்டுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனங்களும், படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்க துவங்கியுள்ளன.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, வேறு மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாகிறது.
இதனால், பின்னலாடை நிறுவனங்களுக்கு, போதிய தொழிலாளர் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.கொரோனா ஒழிப்பில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம்காட்டி வருகின்றன. இதனால், குணமடைவோர் விகிதம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இது, தொழில் துறையினர் மத்தியில் புதிய நம்பிக்கையை துளிர்விடச் செய்துள்ளது.பல்வேறு வகை முயற்சிகள் மூலம், கொரோனா வைரஸ் விரைவில் ஒழிக்கப்படும்; ஆயத்த ஆடை வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்கிற எதிர்பார்ப்புடன், தொழில் துறையினர் காத்திருக்கின்றனர்.
பின்னலாடை துறையினர் கூறியதாவது:வெளிநாடுகளிலிருந்து திருப்பூருக்கு, ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வருகை துவங்கியுள்ளது. குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்துவருவதையடுத்து, அச்சுறுத்திவரும் கொரோனாவை வெற்றி கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் விரைவில் கண்டுபிடிக்கப்படுகின்றனர்; இதனால், பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே அனுப்பிய ஆடைக்கான தொகையை, வெளிநாட்டு வர்த்தகர்கள் வழங்கத்துவங்கியுள்ளனர்.
இப்படி, எல்லாவகையிலும் நேர்மறையான சூழல் உருவாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.வரும் ஆகஸ்ட் மாத இறுதியில், உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆடை வர்த்தகம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவை ஒழிப்பதன்மூலம், ஆர்டர்களை எளிதாக கைப்பற்ற முடியும்.அதனடிப்படையிலேயே, சில நிறுவனங்கள், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து, தற்போது முதலே, தொழிலாளரை அழைத்து வரத்துவங்கியுள்ளன.
எதிர்கால நம்பிக்கையை மனதில் வைத்துக்கொண்டு, தற்போது, குறைந்தபட்ச தொழிலாளருடன், சேம்பிள் ஆடை உற்பத்தி, முக கவசம், முழு கவச ஆடை தயாரிப்பில் நிறுவனங்கள் வேகம் காட்டி வருகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X