தமிழ்நாடு

இப்ப ஊத சொல்லுங்க பார்ப்போம்! போலீசாருக்கு சவால் விடும் 'குடி'மகன்கள்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement


கோவை:கொரோனாவால், போலீசார் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்காததால், 'குடி'மகன்கள் குஷியாகி உள்ளனர். மது அருந்தி உள்ளதையும், எந்தளவுக்கு மது அருந்தி உள்ளார் என்பதை கண்டறியவும், போக்குவரத்து போலீசாருக்கு, 'பிரத் அனலைசர்' கருவிகள் வழங்கப்பட்டிருந்தன.அரசு மருத்துவமனை டாக்டர் பரிசோதனை செய்யவும் வழிவகை இருந்தது. இது தவிர, மது அருந்தியவரை ஊதச் சொல்லியும், போலீசார் கண்டறிந்து வந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக, போக்குவரத்து போலீசார் இந்நடைமுறைகளை பின்பற்ற முடியவில்லை. குறிப்பாக, கொரோனா தாக்கம் துவங்கியதும், போலீசாரிடமிருந்து அனைத்து பிரத் அனலைசர் கருவிகளும், திரும்ப பெறப்பட்டு விட்டன.கடந்த, ஜன., முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களில், கோவை மாநகரில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ('டி.டி.,) 3,491 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதன் பின் வழக்குகள் பதியப்படவில்லை.குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாத காரணத்தால், குடிமகன்கள் குடித்து விட்டு ஜாலியாக வாகனம் ஓட்டுகின்றனர். கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில், ''கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், மது அருந்தி வாகனங்கள் ஓட்டுவோரை பரிசோதிக்க முடிவதில்லை. இதனால், 'டி.டி.,' வழக்குகள் பதியப்படுவதில்லை.சாதாரணமாக ஒவ்வொரு மாதமும், 1,000 வழக்குகள் வரை பதிவு செய்யப்படும். ஆனால், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டால், அப்போது அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, வழக்கு பதிவு செய்யப்படுகிறது,'' என்றார்.கொரோனா தொற்று காரணமாக, குடிகாரர்களை ஊதச்சொல்லி சோதிப்பது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில், இப்பிரச்னை முடிவுக்கு வந்ததும், மீண்டும் ஊதச்சொல்லி சோதிக்கும் நடைமுறை அமலுக்கு வரும்.-சுமித் சரண்,மாநகர போலீஸ் கமிஷனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X