பொது செய்தி

தமிழ்நாடு

சிறைவாசிக்கு தொற்று; சுகாதாரப்பணி தீவிரம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

அவிநாசி:கோவை மாவட்டம், சூலூரில் லாட்டரி விற்பனை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட, 46 வயது நபர் கடந்த, 27ம் தேதி இரவு கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின், அவிநாசி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.நேற்று வெளியான பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட, அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.கிளைச்சிறையில் மேலும், 18 சிறைவாசிகள் மற்றும் ஒன்பது அதிகாரிகள் உள்ளனர். பிற சிறைவாசிகள், தொற்று பாதித்தவரின் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X