பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலி... பளபளப்பாக மாறிய அம்மா உணவகம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 தினமலர் செய்தி எதிரொலி... பளபளப்பாக மாறிய அம்மா உணவகம்

கோவை:

குடோன் போன்ற அறைகளில், ஈ மொய்க்கும் உணவுடன், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட அம்மா உணவகங்கள், தினமலர் செய்தியால், புதிய வசதிகளுடன் பளபளப்பாக மாற்றப்பட்டுள்ளன. கோவை மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 12 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. ஊரடங்கு காலத்தில் இந்த அம்மா உணவகங்கள்தான், பசித்த வயிற்றோடு வரும் ஏழைகளுக்கும், விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கும் அட்சய பாத்திரம். ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருப்பதால், மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, அம்மா உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்பட்டு வந்தது. உணவு பாத்திரங்களில் ஈக்கள் மொய்த்தன. சாம்பார் சாதம், சாம்பார் கஞ்சியாக வழங்கப்பட்டது.ஒலம்பஸ்சில் அலம்பல்!இங்கே இப்படியென்றால், ஒலம்பஸ் பகுதியில் உள்ள, அம்மா உணவகத்திலோ, பாதி திறக்கப்பட்ட ஷட்டர் வழியாகதான், உள்ளே நுழைய வேண்டும். உள்ளே குடோன் போன்று சுகாதாரமற்று இருந்த இடத்தில், மக்கள் தரையில் ஆங்காங்கே அமர்ந்து பரிதாபமாக சாப்பிடும் அவல நிலை இருந்தது.இது குறித்து, நமது நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானது. இதையடுத்து, இரு உணவகங்களும் சுகாதாரமான வசதிகளுடன் இப்போது பளபளக்கின்றன.சூடாக உணவு வழங்க, பளபளப்பான புதிய 'ஹாட்கேஸ்' பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஈக்களை கவர்ந்து இழுக்கும் மெஷின் பொருத்தப்பட்டுள்ளது. அரிசி மூட்டைகள் அகற்றப்பட்டுள்ளன.சுற்றாமல் இருந்த மின் விசிறிகள் சுற்றுகின்றன. தண்ணீர் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. பணியாளர்கள் மாஸ்க் அணிந்துள்ளனர். சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம், ''சாப்பாடு ருசி எப்படி,'' என்றோம். 'இப்ப பரவாயில்லை சார்...நல்லாயிருக்கு' என்றனர்.இந்த நிலை தொடர, அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X