பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு கையேடு கிராமங்களில் வினியோகிக்க திட்டம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 கொரோனா விழிப்புணர்வு கையேடு கிராமங்களில் வினியோகிக்க திட்டம்

திருப்பூர்;கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'கொரோனா வைரஸ் அறிந்து கொள்ளுங்கள்' என்ற விளக்க கையேட்டை, ஊரக வளர்ச்சித்துறை அச்சிட்டுள்ளது.தமிழக அரசின் சுகாதாரத்துறை உத்தரவுப்படி, கிராமப்புற மக்களுக்கு, கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எட்டு பக்கங்கள் கொண்ட கையேடு தயாரிக்கப்பட்டது.கொரோனா நோய்க்கான அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், வீட்டு கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்திக்கொள்தல், பரிசோதனை முறை மற்றும் பரிசோதனை மையங்கள், மருத்துவமனை விவரங்களுடன், கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக அச்சிடப்பட்ட, ஒரு லட்சம் கையேடுகள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ''கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு வழிகாட்டுதலின்படி, கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.ஒன்றியம் வாரியாக பிரித்து வழங்கி, கிராமப்புறங்களில் வீடு வீடாக வினியோகம் செய்யப்படும், கொரோனாவிலிருந்து பாதுகாக்க மக்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறை குறித்து எடுத்துரைக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X