சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண்சரிவால் வீடுகளில் விரிசல் இடம் மாறியது மூன்று குடும்பங்கள்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 மண்சரிவால் வீடுகளில் விரிசல்  இடம் மாறியது மூன்று குடும்பங்கள்

கூடலுார்:

நடுவட்டம் பஸ் ஸ்டாண்ட் அருகே, மண்சரிவு ஏற்பட்டு, மூன்று வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால், அதில் வசிப்பவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.கூடலுார் நடுவட்டம் பகுதியில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக, குடியிருப்பை ஒட்டி, தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், மாலை பெய்த மழையின் போது, அங்கு மண் சரிவு ஏற்பட்டது. அதில், ஈஸ்வரமூர்த்தி, அந்தோணி ஆல்வாஸ், தருமசக்தி ஆகியோர் வீடுகளில், விரிசல் ஏற்பட்டது.நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் ஊழியர்கள் அப்பகுதியை ஆய்வு செய்து, அந்த வீடுகளில் வசிப்பவர்கள் அனைவரையும், வேறு இடங்களில் தங்க வைத்தனர்.அப்பகுதியினர் கூறுகையில்,' இப்பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு, வீடுகள் சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே, தடுப்பு சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X