பொது செய்தி

தமிழ்நாடு

'ஆண்களை விட பெண்கள் அதிக குணம்!' சுகாதாரத்துறையினர் தகவல்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதித்த ஆண்களை காட்டிலும், பெண்கள் வேகமாக குணமடைந்து வருவதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், மார்ச் 18 ம் தேதி கொரோனா கால்பதித்தது. நேற்று காலை நிலவரப்படி, 757 நபர்களுக்கு தொற்று பரவியுள்ளது. அவர்களில், 65 சதவீதம் வரை குணமாகிவிட்டனர். மாவட்டத்தில், பெண்களை காட்டிலும், ஆண்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், ஆண்களுக்கு முன்பாகவே பெண்கள் விரைவாக குணமடைந்து வருவதாக, சுகாதாரத்துறை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. பிறந்து இரண்டு மாதமான குழந்தை முதல், 10 வயது வரை, 46 குழந்தைகளுக்கு இதுவரை கொரோனா பரவியது; 42 பேர் குணமாகிவிட்டனர்.சிறுவர், சிறுமியரில், 11 முதல், 20 வயது வரையுள்ள, 46 சிறுவர்கள்; 38 சிறுமியர் என, 84 பேர் பாதிக்கப்பட்டனர். அடுத்ததாக, 21 முதல், 30 வயது வரையில், 70 ஆண்கள்; 65 பெண்கள் என, 135 பேர் பாதிக்கப்பட்டனர்.மாவட்டத்தில், 31 முதல், 50 வயது வரையள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தான், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பில், இவர்கள், 40 சதவீதம். இந்த வயது பிரிவில், 202 ஆண்கள்; 99 பெண்கள் என, 301 பேருக்கு தொற்று பரவியுள்ளது.நேற்றைய நிலவரப்படி, 41 முதல், 50 வயது பிரிவில், 82 ஆண்; 40 பெண்கள் என, 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 51 முதல், 60 வயது வரையுள்ளோரில், 73 ஆண்; 48 பெண்கள் என, 121 பேருக்கு தொற்று பரவியுள்ளது.
மாவட்டத்தை சேர்ந்த முதியோர்களில், 45 ஆண்; 25 பெண்கள் என, 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா கால்பதித்த, 132 நாளில், 459 ஆண், 298 பெண்கள் என, 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 132 நாட்களாக கொரோனா தொற்று ஒழிப்பு பணி நடந்து வருகிறது. இடையே, 41 நாட்கள் மட்டும் கொரோனா இல்லை.
மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு, 757 ஆக உயர்ந்துள்ளது. ஆண்களை காட்டிலும், பெண்கள் வேகமாக குணமடைந்து விடுகின்றனர்.மாவட்டத்தின் மொத்த பாதிப்பில், ஆண்கள், 61 சதவீதம்; அவர்களில், 40 சதவீதம் பேர் முதியவர்கள். கொரோனா தொற்றுக்கு இதுவரை, 15 பேர் பலியாகியுள்ளனர்.அவர்கள் அனைவரும், இருதயநோய், சிறுநீரக கோளாறு மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர். நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி, மற்றவர்கள் எளிதாக குணமடைந்து வருகின்றனர்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X