நோய் தொற்றில் இருந்து ஐந்து போலீசார் மீண்டனர்| Dinamalar

நோய் தொற்றில் இருந்து ஐந்து போலீசார் மீண்டனர்

Added : ஜூலை 30, 2020 | |
திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, ஐந்து போலீசார் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தனர்.திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த எஸ்.ஐ., போலீஸ் ஏட்டு, அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த பெண் போலீஸ் உட்பட ஐந்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு

திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, ஐந்து போலீசார் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தனர்.திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த எஸ்.ஐ., போலீஸ் ஏட்டு, அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த பெண் போலீஸ் உட்பட ஐந்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இச்சூழலில், கொரோனா தொற்றில் இருந்து, ஐந்து போலீசார் மீண்டு, அவரவர் வீடுகளில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். நேற்று ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கமிஷனர் அறிவுறுத்தல்கொரோனாவின் தாக்கம் காரணமாக, அத்தியாவசிய தேவைக்கு மட்டும் போலீசாருக்கு விடுப்பு வழங்க வேண்டும், போலீசார் வெளியூர் செல்ல கூடாது. ஒரு வேளை வெளியூர் சென்று வரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட போலீசார் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு, பரிசோதனை செய்த பின்னே பணிக்கு திரும்ப வேண்டும் உள்ளிட்ட சில அறிவுரைகளை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X