விதிமீறி தொழிலாளரை அழைத்து வந்தார்களா? கண்காணிக்க கலெக்டர் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறி தொழிலாளரை அழைத்து வந்தார்களா? கண்காணிக்க கலெக்டர் உத்தரவு

Added : ஜூலை 30, 2020
Share

திருப்பூர்;முறையான அனுமதி பெறாமல், வெளியே இருந்து தொழிலாளரை அழைத்து வந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சாலைகளில், தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அழைத்துவர, 'இ-பாஸ்' பெற்று, முறையான அனுமதியுடன் அழைத்துவர வேண்டுமென, தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.வடமாநில தொழிலாளர் சொந்த ஊரிலிருந்து திரும்பி மீண்டும் திருப்பூர் வர காத்திருக்கின்றனர். வெளிமாநில தொழிலாளர்களை, ஏஜன்டுகள் மூலமாக, 'இ-பாஸ்' பெறாமலேயே மீண்டும் அழைத்துவர, சில நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம், நோய் தொற்று மீண்டும் அதிகம் பரவும் அபாயம் உள்ளது.கலெக்டர் விஜய கார்த்திகேயன், தாசில்தார்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''எவ்வித அனுமதியும் பெறாமல், பிற மாவட்டம் அல்லது மாநிலங்களில் இருந்து, மாவட்டத்துக்குள் வருவதை தடுக்க வேண்டும். முறையான அனுமதி பெறாமல், வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம்- 2005ன் கீழ் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X