பொது செய்தி

தமிழ்நாடு

எந்தெந்த கல்லுாரியில் ஒரே ஷிப்ட்?

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட, மூன்று அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் மட்டும் ஒரே ஷிப்ட் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.கோவை மண்டலத் துக்கு உட்பட்டு, 13 அரசு கலை கல்லுாரிகள் செயல்படுகின்றன. காலை, மாலை என இரு ஷிப்ட் முறை பின்பற்றப்படுகிறது. காலை வகுப்பு, 8:45க்கு துவங்கி, 1:15 மணி வரையிலும், மாலை வகுப்புகள், மதியம், 1:30க்கு துவங்கி மாலை,

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட, மூன்று அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் மட்டும் ஒரே ஷிப்ட் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.கோவை மண்டலத் துக்கு உட்பட்டு, 13 அரசு கலை கல்லுாரிகள் செயல்படுகின்றன. காலை, மாலை என இரு ஷிப்ட் முறை பின்பற்றப்படுகிறது. காலை வகுப்பு, 8:45க்கு துவங்கி, 1:15 மணி வரையிலும், மாலை வகுப்புகள், மதியம், 1:30க்கு துவங்கி மாலை, 6:30 மணி வரை நடக்கிறது. கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு சிரமங்கள் உள்ளதால், இதனை ஒரே ஷிப்டாக மாற்ற உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.காங்கயம், பல்லடம், அவிநாசி, வால்பாறை மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட, ஐந்து அரசு கலை கல்லுாரிகள் ஒரே ஷிப்டாக மாற்றப்பட்டுள்ளன. இதன்கீழ், காலை, 9:30 மணி முதல், மாலை, 4:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம் கூறுகையில், ''மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டு, பேரா சிரியர் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X