நான்கு புதிய அம்மா சிமென்ட் கிடைப்பது எளிது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு புதிய அம்மா சிமென்ட் கிடைப்பது எளிது

Added : ஜூலை 30, 2020
Share

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், வரும் 1ம் தேதி முதல், கூடுதலாக நான்கு ஒன்றியங்களில், 'அம்மா சிமென்ட்' விற்பனை கிடங்கு திறக்கப்படுகிறது.ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை நனவாக்கும் வகையில், ஜெ., முதல்வராக இருந்த போது, 'அம்மா சிமென்ட்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. நகரப்பகுதியில், நுகர்பொருள் வாணிப கழகமும், ஊரகத்தில், ஊரக வளர்ச்சித்துறையும், இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.மாவட்டத்தில், முதல்கட்டமாக, ஒன்பது ஒன்றியங்களில் 'அம்மா சிமென்ட்' விற்பனை நடந்து வருகிறது.இந்நிலையில், கூடுதலாக நான்கு ஒன்றியங்களில், வரும் 1ம் தேதி முதல், விற்பனை கிடங்கு திறக்கப்பட உள்ளது. பயனாளிகள், சிமென்ட் மூட்டைகளை எடுத்துவர, தொலைவாக சென்றுவர வேண்டியிருப்பதால், அந்தந்த ஒன்றியங்களிலேயே, விற்பனை கிடங்கு திறக்கப்படுகிறது.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வெளிமார்க்கெட்டில், 50 கிலோ கொண்ட, ஒரு மூட்டை சிமென்ட், 370 முதல், 450 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அம்மா சிமென்ட் திட்டத்தில், 190 க்கு கிடைப்பதால், மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.அரசு மானியத்துடன் கட்டும் வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், சிமென்ட் ஒதுக்கப்படுகிறது. மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், ஒவ்வொரு ஒன்றியத்திலும், வரும் 1ம் தேதி முதல், அம்மா சிமென்ட் கிடங்கு செயல்பாட்டுக்கு வரும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X