பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை சாகுபடி செழிப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 நிலக்கடலை சாகுபடி செழிப்பு

திருப்பூர்:ஆடிப்பட்டத்தில் விதைத்த நிலக்கடலை பயிர் நல்ல முறையில் வளர்ந்து நிற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மானாவாரி பயிராக பெருமளவு விளைவிக்கப்படும் நிலக்கடலை திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பொங்கலுார், காங்கயம் ஒன்றியப் பகுதிகளில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. பொதுவாக, சித்திரை, ஆடி மற்றும் கார்த்திகை ஆகிய மூன்று பட்டங்களில் விதைக்கப்படுகிறது.அவ்வகையில், பொங்கலுார் வட்டாரம் அவிநாசிபாளையம் பகுதியில் பல விவசாயிகள் தங்கள் நிலங்களில் நிலக்கடலை பயிரிட்டனர். இந்த சமயத்தில் கோடை மழையும் ஓரளவு கை கொடுத்தது.ஆடிப்பட்டத்தில் விதைத்த நிலக்கடலை தற்போது பூவிட்டு வளர்ந்து நிற்கிறது. நிலத்தில் உள்ள களைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நிலக்கடலைக்கு தற்போது ஓரளவு நல்ல விலையும், மார்க்கெட்டில் கேள்வியும் உள்ளது. இதனால், நிலக்கடலை விதைத்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.பெருமளவு எண்ணெய் வித்தாக பயன்படும் நிலக்கடலை, 95 சதவீதம் உணவு பொருளாகவும், 5 சதவீதம் தொழில் பயன்பாட்டுக்கும் செல்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X