பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று மருத்துவமனையில் தனி கவனம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் கர்ப்பிணிகள் மீது தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை, அரசு மகப்பேறு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.கொரோனா பாதிப்பு ஆளாகும் கர்ப்பிணி பெண்களுக்கு உரிய சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் திருப்பூரில், 764 பேர், சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், மூன்று கர்ப்பிணிகள் உட்பட, 28 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கர்ப்பிணிகள், பெரிச்சிபாளையம் அரசு மருத்துவ கல்லுாரியில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் மீது டாக்டர்கள் தனிகவனம் செலுத்துகின்றனர்.கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெறும் போது, அவர்களது குழந்தைக்கு தொற்று ஏற்படாமல்தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X