வோட்காவை குடிங்க; கொரோனாவை விரட்டுங்க: பெலாரஸ் நாட்டு அதிபர்

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Belarus President, CoronaVirus, Covid-19, கொரோனா, வைரஸ், மனநோய், பெலாரஸ், அதிபர்

மின்ஸ்க்: கொரோனா ஒரு மனநோய் என்றும், அதிலிருந்து எந்தவொரு மருந்தும் இன்றி குணமடைந்துள்ளதாகவும் பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ தெரிவித்துள்ளார்.

பெலாரஸ் நாட்டு அதிபராக உள்ள அலெக்சாண்டர் லுகாசென்கோ, 1994ம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய தொற்றான கொரோனா வைரஸை இவர் ஆரம்பம் முதல் அலட்சியம் செய்து வந்தார். கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், வீட்டு மருத்துவத்தையே பின்பற்றுமாறும் கூறினார். மேலும், அந்நாட்டில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த மறுத்தார். மொத்தம் 95 லட்சம் மக்கள் தொகையை கொண்ட அந்நாட்டில் இதுவரை 67,670 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 553 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 61,442 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.


latest tamil news


கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் உச்சத்தில் இருந்த மே மாதத்தில் கூட லுகாசென்கோ, ராணுவ அணிவகுப்பு நடத்தினார். மேலும், அந்த சமயத்தில் தொடர்ந்து அரசு அலுவல்கள், சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்தார். அந்த அளவிற்கு அலட்சியமாக இருந்த அவர், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவித்தார். அவர் கூறியதாவது: நான் கொரோனா தொற்றிலிருந்து எவ்வித மருந்தும் எடுத்துக்கொள்ளாமலேயே மீண்டுவந்துள்ளேன். மருத்துவர்கள் இது அறிகுறியற்ற நோய் என்று கூறியுள்ளனர். நம் நாட்டில் 97 சதவீதம் பேர் அறிகுறி இல்லாமலேயே இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் நாம் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும். இந்நோய் ஒரு மனநோய்தான், அதனால் வோட்கா குடித்தபடி கொரோனாவை விரட்டுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
30-ஜூலை-202019:47:41 IST Report Abuse
Mani . V அட அங்கேயும் சங்கிகளின் பிரதிநிதியா? கோவிந்தா கோவிந்தா
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
30-ஜூலை-202019:16:44 IST Report Abuse
S. Narayanan முற்றிலும் உண்மை. மனதிடம் இருந்தால் கொரோனாவும் இல்லை.கிரோனாவும் இல்லை.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
30-ஜூலை-202017:21:38 IST Report Abuse
வெகுளி கொரோனாவால போற உசுரு குடிச்சுட்டு ஹாஇப்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X