பொது செய்தி

தமிழ்நாடு

பருவ மழையில் துளிர்க்கும் பசுமை: 2,034 மரக்கன்று நடவு செய்து அருமை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 பருவ மழையில் துளிர்க்கும் பசுமை: 2,034 மரக்கன்று நடவு செய்து அருமை

திருப்பூர்:பல்லடம், அனுப்பட்டியில் நேற்று நடந்த, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட நிகழ்ச்சியில், 2,034 மரக்கன்றுகள் நடப்பட்டன.தென்மேற்கு பருவமழையின் தாலாட்டுடன், 'வனத்துக்குள் திருப்பூர் - 6' திட்டம், வேகமாக வேர்விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.திட்டத்தின் அருமையை உணர்ந்து, அரசு தரப்பு பாராட்டி வரும் வேளையில், விவசாயிகளும், தொழில்துறையினரும், மரம் வளர்க்க அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.ஆறாவது திட்டத்தில், 17வது நிகழ்ச்சி, பல்லடம் அருகே நேற்று நடந்தது. வெங்கிட்டாபுரம் அடுத்த, அனுப்பட்டி சரளை தோட்டத்தில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.உரிமையாளர் சரளை ஸ்ரீவிக்னேஷ், கந்தசாமி, காந்தி, சிவராமகிருஷ்ணன், ஜெயக்குமார், ஸ்ரீகுமரன் பிரிடிங் பார்ம் ஊழியர்கள், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.ஸ்ரீகுமரன் பிரிடிங் பார்ம்சில், நாட்டு வேம்பு, பூவரசு, புளி, நீர்மருது, இலுப்பை, நாவல், கொடுக்காப்புளி, நாட்டு அத்தி, சிசு ஆகியவை, 534 மரக்கன்றுகள் நடப்பட்டன.அதே வகையில், 1,500 மரக்கன்றுகளை கொண்டு, 'மியாவாகி' முறையிலும், அதே பகுதியில் நடவு செய்யப்பட்டது.நேற்று ஒரே நாளில், 2,034 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், மரக்கன்று நடவு செய்ய விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X