பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு நடமாடும் நூலகதிட்டம்: 'லாக்டவுன்' நாட்களை பயனுள்ளதாக்கும்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

உடுமலை:குழந்தைகளின் 'லாக் டவுன்' நாட்களை பயனுள்ளதாக மாற்ற, நடமாடும் நுாலகத்துக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த, தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வீட்டிலுள்ள பெரியவர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, பணிகளுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால், குழந்தைகளின் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை.'ஆன்லைன்' வகுப்புகள் சிலருக்கு துவக்கப்பட்டுள்ளது. பலருக்கும், 'டிவி'க்களும், மொபைல் போன்களும் மட்டுமே பொழுதுபோக்காக உள்ளது. குழந்தைகளின் இந்த நிலையை மாற்ற, யோகா மற்றும் புத்தக வாசிப்பு பழக்கங்களை மேம்படுத்த வேண்டும் என, உளவியல் ஆலோசகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால், பலரும் கடைகளில் புத்தகங்களை வாங்கி குழந்தைகளுக்கு தருகின்றனர். ஆனால், கிராமங்களில் இதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது.இந்த சூழலில், குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்த, நுாலகத்துறை உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதி மக்கள் கூறுகையில், 'நடமாடும் நுாலகத்திட்டத்தை செயல்படுத்தி, குழந்தைகளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான புத்தகங்களை வீடுகள் தோறும் சென்று வழங்கலாம். முறையாக கிருமிநாசினி பயன்படுத்தி, புத்தகங்களை வினியோகிக்கலாம். இதனால், குழந்தைகளின் வாசிப்புத்திறன் மேம்படுவதோடு, அவர்களின் அறிவாற்றல், கற்பனைத்திறன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அரசு நடமாடும் நுாலகத்துக்கு ஏற்பாடு செய்தால் குழந்தைகளின் 'லாக் டவுன்' நாட்கள் பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X