போக்குவரத்து நெரிசல்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

உடுமலை, சரவணா வீதியில் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எம்.பாஸ்கரன்,உடுமலை.சுகாதார சீர்கேடுஉடுமலை, கணக்கம்பாளையம் ஊராட்சியில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.வி.வசந்தி,கணக்கம்பாளையம்.ஆக்கிரமிப்புகளால் அவதிஉடுமலை சீனிவாசா வீதியில், ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சங்கர்,உடுமலை.விபத்துகள் அதிகரிப்புகோட்டூர் அடுத்த நா.மூ.சுங்கத்தில், நான்கு ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்காததால், அதிகளவில் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வி.கண்ணன்,நா.மூ.சுங்கம்.போக்குவரத்து பாதிப்புபொள்ளாச்சி ராஜா மில் ரோட்டிலுள்ள கடைகளுக்கு, ரோட்டிலேயே வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தி, பொருட்கள் இறக்குவதால் போக்குவரத்து பாதிக்கிறது.எம்.கணேஷ்,பொள்ளாச்சி.கொரோனா அச்சம்பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் உள்ள வங்கி, ஏ.டி.எம்.,களில், மக்கள் சமூக விலகலை பின்பற்றாமல் நிற்பதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்து உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏ.விமல்,பொள்ளாச்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X