பொது செய்தி

தமிழ்நாடு

அரிசி இருப்பு வைக்க குடோன் வசதியில்லை: விலையில்லா டிவி, மிக்சி அப்புறப்படுத்த முடிவு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:நுகர்பொருள் வாணிப கிடங்கில், கடந்த நான்கு ஆண்டுகளாக இருப்பு வைத்திருக்கும், இலவச டிவி, மிக்சி மற்றும் கிரைண்டர்களை அப்புறப்படுத்தாததால், ரேஷன் பொருட்கள் இருப்பு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில், 3.5 ஏக்கரில், 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், மூன்று குடோன்கள் அமைந்துள்ளன.இதில், நான்காயிரம் மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட குடோனில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், மக்களுக்கு இலவசமாக வழங்கியது போக, பழுதடைந்த டிவி, மிக்ஸி, பேன் மற்றும் கிரைண்டர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.கடந்த நான்கு ஆண்டுகளாக, இரு குடோன்களில் பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் பொதுவினியோக திட்ட அரிசி, கோதுமை, உள்ளிட்ட பொருள்கள் பாதுகாக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் கிணத்துக்கடவு, மதுக்கரை மற்றும் கோவில்பாளையம் வரையில் உள்ள, 130 ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக மத்திய அரசு வழங்கும் கொரோனா நிவாரண அரிசியும் இங்கேயே இருப்பு வைக்கப்படுகிறது. இதனால், இரண்டு குடோன்கள் நிரம்பியுள்ளன.சமீப நாட்களாக, டெல்டா மாவட்டங்களில் இருந்து லோடு கணக்கில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், அரவைக்கு செல்லும் முன், குடோனுக்கு கொண்டு வரப்படுகிறது. குடோனில் இடமில்லாததால், அதிகாரிகள் அலைமோதுகின்றனர்.அதிகாரிகள் கூறியதாவது: நான்காயிரம் டன் கொள்ளளவு கொண்ட முதல் குடோனில், தி.மு.க., ஆட்சி காலத்தில் மீதமான இலவச கலர் 'டிவி'க்கள், அ.தி.மு.க.., ஆட்சியில் வினியோகிக்கப்பட்ட மிக்சி, பேன், கிரைண்டர் ஆகியன பல்வேறு தாலுகா மற்றும் மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பொள்ளாச்சி, மதுக்கரை உள்ள, ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் அனுப்ப வேண்டியுள்ளதால், குடோன் வசதி கூடுதலாக தேவைப்படுகிறது.எனவே, குடோனில் குவிக்கப்பட்டுள்ள இலவச பொருள்களை அப்புறப்படுத்த, உயர் அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.அடுத்த சில நாட்களில், நான்கு ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ள, இலவச பொருள்கள் பொள்ளாச்சியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு மாற்றப்பட உள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X