கூடுதல் விலைக்கு மீன் விற்பனை :கட்டுப்படுத்த மக்கள் வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு மீன் விற்பனை :கட்டுப்படுத்த மக்கள் வேண்டுகோள்

Added : ஜூலை 30, 2020
Share
வால்பாறை:கூடுதல் விலைக்கு மீன் விற்பனை செய்வதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில், குத்தகை அடிப்படையில் தினமும் மீன் பிடித்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ மீன், 150 ரூபாய் என்ற விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சமீப காலமாக கூடுதல் விலைக்கு மீன்

வால்பாறை:கூடுதல் விலைக்கு மீன் விற்பனை செய்வதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில், குத்தகை அடிப்படையில் தினமும் மீன் பிடித்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ மீன், 150 ரூபாய் என்ற விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சமீப காலமாக கூடுதல் விலைக்கு மீன் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், 'சோலையாறு அணையில் பிடிக்கப்படும் மீன்கள், பொதுமக்களுக்கு மட்டுமே சில்லரை விற்பனையில் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக பிடிபடும் அனைத்து மீன்களும், ஒரு கிலோ மீன், 100 ரூபாய்க்கு கூடுதல் விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.இதனால், மீன் வாங்க வரும் மக்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்குகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூடுதல் விலைக்கு மீன் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X