பொது செய்தி

தமிழ்நாடு

சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், மூலனுார் கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, ஏழு மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் சாய்ந்து காணப்படுகின்றன.இதுபற்றி ஊராட்சி நிர்வாகம் பலமுறை ராமச்சந்திராபுரம் துணைமின் நிலையத்தில் தெரிவித்து, விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், 'தினமலர்' நாளிதழில், சாய்ந்த நிலையில் மின்கம்பங்களால் மக்கள் அச்சம் என, படத்துடன் செய்தி வெளியானது.இதனையடுத்து, மின்வாரிய அதிகாரிகள், சாய்ந்த நிலையில் இருந்த கம்பங்களை பார்வையிட்டு, விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X