பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கு சலுகை: ஒப்பந்த கட்டணம் செலுத்த தளர்வு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:கொரோனா பரவல் தடுப்புக்காக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்ததாரர்கள் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேவுக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், வாகனம் நிறுத்துமிடம், உணவகம், சிற்றுண்டி அங்காடி உள்ளிட்டவை தனியாருக்கு ஏலம் விடப்பட்டு, ஒப்பந்த முறையில் நடக்கின்றன. பாலக்காடு ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, திண்டுக்கல் கோட்டத்துக்கு உட்பட்ட உடுமலை உள்ளிட்ட ஸ்டேஷன்களில், மூன்றாண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அவற்றை நடத்துகின்றனர்.ஒப்பந்தம் எடுத்த தொகையை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முன்கூட்டி செலுத்தும் நடைமுறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல், கொரோனா பரவலை தடுப்பதற்காக, இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இதையடுத்து, ஒப்பந்தம் எடுத்துள்ளவர்களின் வருவாய் முற்றிலும் பாதித்தது. இதனால், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமலும், மூன்று மாத கட்டணத்தை செலுத்த வழியின்றியும் தவித்தனர்.இந்நிலையை புரிந்து கொண்டு, ரயில்வே நிர்வாகம் ஒப்பந்ததாரர்கள் இம்மாதம் செலுத்த வேண்டிய கட்டணத்தை ரத்து செய்துள்ளது. ரயில்கள் இயக்க துவங்கிய நாளில் இருந்து, கட்டணம் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போல், ரயில்கள் இயங்காத காலகட்டத்தை கழித்து, ஒப்பந்த காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், ஒப்பந்தாரர்கள் முன்வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X