பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா ஆடு, மாடு கிடைக்குமா? அரசை எதிர்பார்க்கும் பயனாளிகள்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:கொரோனா வைரஸ் பரவல் தொடர்வதால், வறுமை கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு, நடப்பு ஆண்டில் ஆடு, மாடுகள் வினியோகிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பயனாளிகளிடையே அதிகரித்துள்ளது.பொள்ளாச்சி கோட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் வாழும், ஏழை குடும்பங்களுக்கு அரசு இலவச ஆடு, மாடுகளை வழங்கியது. நடப்பு ஆண்டும் கால்நடைத்துறையால், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு, தலா நான்கு வெள்ளாடுகள், ஒரு கறவை மாடு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.இருப்பினும், பயனாளிகள் தேர்வு மற்றும் எந்தெந்த கிராமங்களில் முகாம் அமைத்து, கால்நடைகள் வினியோகிப்பது என்பது முடிவாகவில்லை. இந்நிலையில், கொரோனா பரவலால், இப்பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. நடப்பு ஆண்டில், இலவச ஆடு, மாடுகள் வழங்கப்படுமா அல்லது திட்டம் நிறுத்தி வைக்கப்படுமா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X