பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசனம்: வேளாண் அதிகாரி ஆய்வு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 நுண்ணீர் பாசனம்: வேளாண் அதிகாரி ஆய்வு

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், நுண்ணீர் பாசனம் அமைத்த விளைநிலங்களில், மாவட்ட வேளாண் அதிகாரி ஆய்வு செய்தார்.மடத்துக்குளம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது: மடத்துக்குளம் பகுதியில் குழாய் கிணறு மற்றும் துளை கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகப்பட்சமாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். புதியதாக சொட்டுநீர் பாசன மானியம் பெறும் பயனாளிகள் மட்டுமின்றி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர் பாசனத்தை புதுப்பிக்க விரும்பும் விவசாயிகளுக்கும், டீசல் பம்ப்செட், மின் மோட்டார் பம்ப் செட் அமைப்பதற்கு, 50 சதவீதம் மானியம் அல்லது 15 ஆயிரத்துக்கு மிகாமலும் வழங்கப்படும்.வயலுக்கு அருகில் பாசன நீர் கொண்டு செல்லும் வகையில் அமைப்பதற்கு, 50 சதவீத மானியம் அல்லது ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன் தரநிலை நீர்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு, ஒரு கன மீட்டருக்கு 350 ரூபாய்க்கும் மிகாமலும், ஒரு பயனாளிக்கு, 40 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமலும் மானியம் வழங்கப்படும். விவசாயிகள், தங்கள் சொந்த செலவில் பணிகளை நிறைவு செய்து, அதற்கான முழு ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களுக்கான தொகை விடுவிக்கப்பட்ட பின்பு, இந்தப் பணிகளுக்கான மானியத்தொகை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.இத்திட்டத்தின் மூலம் நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் மின்மோட்டார் அமைக்கப்பட்ட பல விளை நிலங்களில், மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X