பட்டுக்கூடு விலை: உற்பத்தியாளர்கள் கவலை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

உடுமலை:அரசு கொள்முதல் மையங்களில், வெண்பட்டுக்கூடுகளின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடு உற்பத்தி பிரதானமாக உள்ளது. உற்பத்தி செய்யப்படும் கூடுகளுக்கு, அரசு கொள்முதல் மையங்களில், கிலோ, 600 ரூபாய் வரை இருந்த விலை, கடந்த சில மாதங்களாக, தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, தர்மபுரி கொள்முதல் மையத்தில், வெண்பட்டுக்கூடு கிலோ அதிகபட்சமாக, 213 ரூபாய்க்கும், சேலம் மையத்தில், 200 ரூபாய், கோவை, 248 ரூபாய், ஒசூர் 170 ரூபாய் என்ற அளவில் கொள்முதல் செய்யப்பட்டது. குறைந்தபட்சமாக, கிலோ 135 ரூபாய்க்கே விலை நிலவரம் இருந்தது. உற்பத்தி செலவுக்கு கூட கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.விவசாயிகள் கூறியதாவது:வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக, அதிகளவு முதலீடு செய்துள்ளதுடன், மல்பெரி தோட்டங்களில், வேறு சாகுபடி எதுவும் செய்ய முடியாது.புழு வளர்ப்பு மனையில், பட்டுக்கூடுகள் இருக்கும் போது, குறிப்பிட்ட இடைவெளியில், மல்பெரி இலைகளை உணவாக அளித்தல், நோய்த்தாக்குதலை தடுக்க மருந்து தெளித்தல் என இரு நபர்கள் முழுமையாக பணிகளில், ஈடுபட வேண்டும்.சீதோஷ்ண நிலை மாற்றத்தின் போது, புழுக்களுக்கு நோய்த்தாக்குதல் ஏற்பட்டால், வேலைப்பளு அதிகரிக்கும். இவ்வாறு, தரமான வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக அதிக சிரமப்படுகிறோம்.ஆனால், அரசு கொள்முதல் மையங்களில், போதிய விலை கிடைப்பதில்லை. பல லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், மாற்றுத்தொழிலுக்கும் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. தமிழக அரசு, பட்டு வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்தி வந்தது. தற்போது, தொழில் பாதிப்பிலிருக்கும் போது, எவ்வித திட்டமும் அறிவிக்கப்படவில்லை.அரசு கொள்முதல் மையங்களில், விற்பனை செய்யப்படும் வெண்பட்டுக்கூடுகளுக்கு, ஊக்குவிப்பு தொகை மற்றும் ஆதார விலை நிர்ணயித்து, கொள்முதல் செய்தால் மட்டுமே இத்தொழிலை, பாதிப்பிலிருந்து மீட்க முடியும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X