பொது செய்தி

தமிழ்நாடு

சோலையாறில் தண்ணீர் திறப்பு; பரம்பிக்குளம் நீர்மட்டம் உயர்வு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 சோலையாறில் தண்ணீர் திறப்பு; பரம்பிக்குளம் நீர்மட்டம் உயர்வு

வால்பாறை:சோலையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையினால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக சாரல்மழை மட்டுமே பெய்கிறது. நேற்று காலை முதல் கனமழை பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து, தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.பருவமழை நீடிக்கும் நிலையில், சோலையாறு அணையிலிருந்து பரம்பிக்குளம் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 108.64 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 685 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,278 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 31.62 அடியாக இருந்தது. கடந்த, 20 நாட்களில், 14 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X