பொது செய்தி

தமிழ்நாடு

விலையில் மாற்றமில்லை 14 கிலோ தக்காளி ரூ.280

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் இருந்து, தக்காளி வரத்து சீராக உள்ளதால், கடந்த ஒரு வாரமாக விலையில் எவ்வித மாற்றம் ஏற்படவில்லை.பொள்ளாச்சி மொத்த காய், கனி மார்க்கெட்டுக்கு, வெளியூர் வரத்து குறைந்த நிலையில், சுற்றுப்பகுதியில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது.தக்காளி வரத்து சீராக இருப்பதால், விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், 14 கிலோ எடை கொண்ட கூடை தக்காளி, 280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஞாயிறு அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால், திங்கள்கிழமை ஏலத்தில் கூடை தக்காளி, 220 ரூபாயாக குறைந்தது. மறு நாளே மீண்டும் பழைய விலைக்கு விற்பனையானது.பச்சைமிளகாய் கிலோ - 28 ரூபாய், வெண்டைக்காய் - 15, பாகற்காய் - 25, 20 கிலோ எடையுள்ள கத்தரிக்காய் பை - 400, பீர்க்கங்காய் - 15, அவரைக்காய் - 30 மற்றும் புடலங்காய் - 15 ரூபாய்க்கும் விற்பனையானது. பெரும்பாலான காய்கள் கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ஐந்து ரூபாய் வரை அதிகரித்து விற்றதால், விவசாயிகள் திருப்தி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X