பொது செய்தி

தமிழ்நாடு

157 பேரில் 60 பேர் 'டிஸ்சார்ஜ்': கொரோனாவில் மீள்வோர் அதிகம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மூன்று கொரோனா சிறப்பு வார்டுகளில், 157 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில், 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கோவை மாவட்டத்தில், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, தேவையான முன்னேற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, நாச்சிமுத்து பிரசவ விடுதி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி என மூன்று இடங்களில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவை மாவட்டத்தில் லேசான அறிகுறியுடன் உள்ளவர்கள், பொள்ளாச்சியில் உள்ள மூன்று சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், அறிகுறி இல்லாதவர்கள், சிறு அறிகுறியுடன் இருப்பவர்களுக்கு, பொள்ளாச்சியில் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மொத்தம், 157 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், 30 பேர், நாச்சிமுத்து பிரசவவிடுதியில், 15; கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சிறப்பு வார்டு, 52, என இதுவரை மொத்தம், 97 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை, 60 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X